பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங்கை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் நீதா அம்பானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கருடன் இணைந்து சரப்ஜோத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நாடு முழுவதிலும் இருந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான நீதா அம்பானி, இந்தியா இல்லத்தில் சரப்ஜோத் சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.