டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், அதிகாலை கல்லணை வந்தடைந்தது.
இதனை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா மற்றும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் மலர்கள் மற்றும் நெல்மணிகளை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முதற்கட்டமாக காவிரியில் இருந்து ஆயிரத்து 500 கன அடியும், வெண்ணாற்றில் இருந்து ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.