தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டுகள் சாலையில் கிடந்தது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் மகளிருக்கான இலவச பயண சீட்டுகள் அணைக்கரை சாலையில் கிடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில் முறைகேட்டில் ஈடுபடுவதற்காக நடத்துனரே டிக்கெட்டுகளை வீசி சென்றிருக்கலாம் எனவும் இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.