கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 238 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில், 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்பட பல்வேறு தரப்பினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுளனர்.
இதேபோல், இந்திய ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த 250-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மீட்புப்படையினர் வயநாடு சென்றடைந்தனர். இந்தக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவை ஒட்டி, கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.