பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டியின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் சீன வீராங்கனையான வுயு -வை எதிர்த்து விளையாட உள்ளார்.
இதையடுத்து பிற்பகல் 2.31 மணிக்கு நடைபெறும் வில்வித்தைப் போட்டியின் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் சீன வீரரான காவ் வெஞ்சாவ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் தகுதி சுற்றில் சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மோட்கில் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
அடுத்தப்படியாக மாலை 3.45 மணிக்கு தொடங்கும் பாய்மரப்படகு போட்டியின் ஆண்கள் பிரிவில் விஷ்ணு சரவணன் இந்திய சார்பில் களமிறங்குகிறார்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு நடைபெறும் மகளிர் பேட்மிண்டன் ரவுண்ட் ஆப் சுற்றில்
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனையான ஹி பிங் ஜியாவோவை
எதிர்கொள்கிறார்.