வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படை!
Sep 12, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படை!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்)  ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவம் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

வயநாட்டில் விமானப்படையின் மீட்புப் பணிகள்!

இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் முக்கியமான தளவாட பொருட்கள்  மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

பெய்லி பாலம், நாய் படைகள், மருத்துவ உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பிற அத்தியாவசிய உபகரணங்கள் போன்ற 53 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை சி -17 விமானம் கொண்டு சென்றுள்ளது.

மேலும், ஏஎன்-32 மற்றும் சி-130 ரக போர் விமானங்கள் நிவாரணப் பொருட்களையும், பணியாளர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய விமானப்படையின் இந்த விமானங்கள் ஒட்டுமொத்தமாக, மீட்புக் குழுக்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருநது கொண்டு செல்ல உதவியுள்ளன. சவாலான வானிலைக்கு இடையிலும் இந்திய விமானப்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பல்வேறு கடற்படை ஹெலிகாப்டர்களை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது. எம்ஐ-17, துருவ் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) ஆகியவை மீட்பு நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பரவலான மோசமான வானிலை இருந்தபோதிலும், சிக்கித் தவிக்கும் நபர்களை அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான மண்டலங்களுக்கு வெளியேற்றுவதற்கும், ஜூலை 31, மாலை வரை அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் ஐ.ஏ.எஃப் விமானங்கள் தொடர்ந்து உதவி வருகின்றன.

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களை விமானம் மூலம் மீட்டு, அவர்களின் பாதுகாப்புக்கும் உடனடி போக்குவரத்துக்கும் உறுதி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: landslide in meppadimassive landslide in wayanadwayanad landslide updateskerala landslide rescuekerala wayanad landslidelandslide in vayanadwayanad landslide latest newsIndian Air Force carrying out rescue operations in Wayanad!kerala: landslide in wayanadWayanad.landslide in keralawayanad landslidewayanad landsliplandslides in keralawayanad landslide videolandslide in wayanadwayanad landslide todaywayanad landslide newsRescue and relief work in Wayanad! - Indian Air Forcewayanad landslidesmajor landslide in wayanad
Share
Tweet
SendShare
Previous Post

சண்டிகர், அசாமில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை! –  நிதின் கட்கரி

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள்!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies