காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள இழுப்பு தோப்பு, வடக்கு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..