திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி 18 தினத்தன்று பூஜைகள் நடத்த அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆடி 18 வரவுள்ளதால் இங்குள்ள அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உள்ளனர். ஆனால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தர்ப்பணத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.