இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தனுஷ்கோடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.