உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பாதிப்புகளை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.