வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்...சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 09:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய உடனேயே, அமெரிக்கா வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரல் மாதம் வங்க தேசத்துக்கு 37 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அதை 20 சதவீதமாகக் குறைத்து உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதனையடுத்து இந்தியா மீதான 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். பிறகு இருநாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் ஒன்பது மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வங்கதேசத்துக்கான வரியை ஒரு சதவீதம் மட்டுமே குறைத்துள்ள அமெரிக்கா அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வேளாண் மற்றும் தொழில் துறை பொருட்களுக்கு வங்கதேசம் தனது சந்தையைத் திறந்து விட்டுள்ளது.

சோயா, பால் பொருட்கள், மாட்டிறைச்சி, கோழி, மரக் கொட்டைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களும், மருத்துவ சாதனங்கள் ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கும் வங்கதேசம் நிபந்தனையற்ற அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் விமானம் தாங்கி போர்க்கப்பலான பிமான், 14 போயிங் விமானங்களைக் கொள்முதல் செய்யவும் வங்கதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக சான்றிதழ்களை அங்கீகரித்துள்ள வங்கதேசம், மறுஉற்பத்தி செய்யப்பட்ட அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
மேலும், வாகன புகை உமிழ்வு மற்றும் பாதுகாப்பு விதிகளில் அமெரிக்கத் தரநிலைகளையும் வங்கதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்த்தின் ஒரே நல்ல விஷயம், சில ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான வரி விலக்குகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழை கொண்டு உற்பத்தி செய்யப்படும் வங்க தேச ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு மட்டும் அமெரிக்கா வரி விலக்கு அளித்துள்ளது.

சுமார் நான்கு மில்லியன் ஜவுளித் துறை தொழிலாளர்களைக் கொண்டுள்ள வங்கதேசம் உலகின் இரண்டாவது பெரிய ஆடை உற்பத்தியாளராக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாகும்.

எனவே அந்நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் ஜவுளித் துறைக்கு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு விதித்த அதே 19 சதவீத வரியை வங்கதேசத்துக்கு விதித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளது.

அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழை கொண்டு உற்பத்தி செய்யப்படும் வங்க தேச ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு வரிவிலக்கு அளித்துள்ள அமெரிக்கா, அதேசமயம் இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு 18 சதவீத வரி விதித்துள்ளது.

அமெரிக்க விவசாய மற்றும் தொழில் துறை பொருட்களுக்கு இந்தியா அனுமதி அளிக்காத நிலையில் வங்கதேசம் நிபந்தனையற்ற அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americaBangladeshUnited Statestrade agreementTrade agreement with Bangladeshagreement with Bangladeshus trumpyunus
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

Next Post

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies