வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!
Oct 17, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 10:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…

திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரங்களான காட்டுப்புத்தூர், சீனிவாசநல்லூர், உன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விளையும் ‘கற்பூர வெற்றிலை’ அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

​தற்போது கற்பூர வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெற்றிலை விற்பனை சரிந்துள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

வெற்றிலை சாகுபடிக்கான இடுபொருட்கள், உரம், மற்றும் வேலையாட்கள் கூலி எனச் செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. அதிகாலை முதல் கடும் உழைப்பை கொட்டி விளைவித்த வெற்றிலையைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், கட்டுப்படியாகாத விலையே கிடைக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டு வெற்றிலைக்குக் கிடைக்கும் விலை, அதை பறிப்பதற்கான கூலிக்கும் கூடப் போதுமானதாக இல்லை என நிலவரத்தை அவர்கள் கூறுகின்றனர்.

வெற்றிலை விலை வீழ்ச்சியால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வெற்றிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் வெற்றிலை பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: cauvery waterFARMERSTiruchyBetel leafCamphor betelBetel nut prices fallTamilnadu farmers
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Next Post

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies