இந்தியாவின் 2- வது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 32 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ஜூலையில் இருந்து 2022 மார்ச் மாதம் வரை அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளின் மூலம் இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அனைத்தையும் செலுத்தியுள்ளதாகவும், வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி விதிமுறைகளுக்குள் வருவதில்லை என்றும் கூறியுள்ளது.