திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 2 உயர் அழுத்த மின்கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 43 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 24 ஆயிரம் கன அடியும், தண்ணீர் திறக்கப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், சாய்ந்த நிலையில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள் தண்ணீரில் சரிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.