புனே அருகே வீட்டின் முன்பு உள்ள இரும்பு ஸ்லைடிங் கேட் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் போப்கேல் பகுதி அருகே சிறுவன் ஒருவன் தமது வீட்டின் முன்பு இருந்த ஸ்லைடிங் கேட்டை மூட முயன்றுள்ளார். அப்போது இரும்பு கேட் முழுவதுமாக கழற்று விழுந்ததில், அவ்வழியாக சிறுவனுடன் வந்த சிறுமி சிக்கிக்கொண்டார்.
இதை பார்த்த சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடிவந்து சிறுமியை மீட்டுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.