வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில அறிவியல் மைய விஞ்ஞானிகளுக்கு விடப்பட்டிருந்த வாய்மொழி உத்தரவை முதலமைச்சர் பினராயி விஜயன் திரும்பப்பெற்றார்.
வயநாடு நிலச்சரிவு குறித்த கருத்துகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு மாநில அறிவியல் மையத்திற்கு கேரள அரசு உத்தரவிட்டது.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய குறிப்பை திரும்ப பெறுமாறு தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்