விலைவாசி உயர்வை கண்டித்து நைஜீரியாவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நைஜீரியாவில் வேலைவாய்ப்பின்மை, உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவை நிலவி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் கூறி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் அபுஜாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது. அப்போது அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.