ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலில், மகா நந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில், மகா நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு மற்றும் சந்தனம் உள்ளிட்டவைகளில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், நந்தியம் பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று மகா நந்தியம் பெருமானை வணங்கினா்.