பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச விவசாய பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், உணவு மற்றும் விவசாயத்தை பற்றிய இந்தியர்களின் அனுபவமும், அறிவும் அளப்பரியது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படுவதாகவும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாய நலனில் அக்கறை கொண்டதாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
பால், மசாலா பொருட்கள் மற்றும் பருப்பு உற்பத்தியில் இந்தியா சிறந்த இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியா போராடி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.