ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் கையில் அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேணிக்கரை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் சித்திரைவேலு, காவலர் கருப்புசாமி உள்பட 4 பேர் கடந்த மாதம் மேலக்கோட்டை கிராமத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல் கடத்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அனைவரும் லுங்கி அணிந்து, கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்தனர்.
இதனை கண்டு சந்தேகமடைந்த மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் போலீசார் என சித்திரைவேலு கூறியதையும் நம்பாமல் அவர்களை சில இளைஞர்கள் தாக்க முயன்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீஸ் அதிகாரிகளே கையில் அரிவாளுடன் சுற்றித்திரிவது சரியா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.