புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் விற்பனைக்கு வந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுற்றுலா நகரமாக விளங்கிவரும் புதுச்சேரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு உணவகங்களில் வித்தியாசமான உணவுகள் சமைத்து பரிமாறப்படுகிறது.
அந்த வகையில் புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பீட்சா விற்பனைக்கு வந்துள்ளது. 36 அங்குலம் கொண்ட இந்த பீட்சா ஒரே நேரத்தில் 20 பேர் உண்ணும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்திய முறைப்படி தயாராகியுள்ள இந்த பீட்சாவுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.