வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க திமுக அரசிடம் வலியுறுத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்கு உடை, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியின்போது வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.