கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளும், அவர்களது பெற்றோரும் அப்பகுதியில் உள்ள மலையின் மீது ஏறி குகையில் தஞ்சமடைந்தனர்.
பின்னர், குகை மீது ஏறி உதவிக்காக அபயக்குரல் எழுப்பினர். இதையறிந்த மீட்பு படையினர், கடும் சவால்களுக்கு இடையே அந்தப் பகுதியை அடைந்து ஏறத்தாழ நான்கரை மணிநேரம் போராடி 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.