மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.