உதகையில் 3 மாதங்களுக்கு பிறகு பைக்காரா படகு இல்லம் திறக்கப்பட்டது.
கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பைக்கார படகு இல்லம் வரை 3 கோடி ரூபாய் செலவில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் படகு இல்லம் மூடப்பட்டது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில், பைக்காரா படகு இல்லம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள மகிழ்ச்சி அடைந்தனர்.