பிக் பாஸ், WWE எல்லாமே ஸ்க்ரிப்ட் தான் என முன்னாள் WWE வீரர் கிரேட் காளி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்றே WWE போட்டிகளும் ஸ்கிரிப்ட் செய்யப்படுகின்றன என கிரேட் காளி கூறியுள்ளார். இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொள்ள வாரத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றதகவல்கள் வெளியாகியுள்ளன.