பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று களம் காண்கிறார்.
பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியடைந்ததால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான மலேசியாவைச் சேர்ந்த லீ ஸி ஜியாவுடன், லக்சயா சென் மோதுகிறார்.