முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 12, 2025, 09:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வரின் ரோட் ஷோ நிகழவிருப்பதைக் காரணம் காட்டி, உடுமலைப்பேட்டை நகரப் பேருந்து நிலையத்தையே மாற்றி 1.5 கி.மீ. தொலைவில் ஒரு குப்பை மேட்டில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ள அறிவாலய அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  தமிழகத்தின் பல பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் விளம்பர அரசியலுக்காக தெருவில் இறங்கி தரிசனம் காட்டும் முதல்வரின் தேர்தல் உத்திக்காக, வியர்க்க விறுவிறுக்க பேருந்து நிலையத்தைத் தேடி மக்கள் எதற்கு அலைய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுவும் பேருந்து நிலையத்தை மாற்றுகிறோம் என அரசு சார்பில் மக்களுக்கு முறையாகத் தெரியப்படுத்தப்பட்டதா என்று கூடத் தெரியவில்லை. படிக்கும் பிள்ளைகள் முதல் வயதான முதியோர் வரை எத்தனை பேர் பேருந்துக்காக பழைய இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? என வினவியுள்ளார்.

சொல்லாமல் கொள்ளாமல் சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டு மொத்த ஊரையும் வெள்ளத்தில் மிதக்கவிட்ட இந்த அலங்கோல அரசு எதைத்தான் ஒழுங்காகச் செய்துள்ளது?

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை மொட்டை வெயிலில் காய விடுவது, ரோட் ஷோ என்ற பெயரில் பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துவது என தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக தொடர்ந்து மக்கள் நலனைக் கிள்ளுக்கீரையாக பிய்த்து எறிந்து வரும் இந்த அராஜக திராவிட மாடல் ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் நாள் வெகு தூரமில்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP State PresidentNainar NagendranChief Minister's road showUdumalaipettaibus stand change issue
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

Next Post

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies