டிஎன்பிஎல் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கோவையை வென்ற திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் அணியும், கோவை அணியும் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கோவை அணி, 20 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.2 ஓவர்களில் இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.