பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மர்மம் நிறைந்த பகுதியாகப் பெர்முடா முக்கோணம் விளங்கி வருகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கங்களை அளித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகில் பல விஷயங்கள் இதுவரை விடை காணப்படாத மர்மமாகவே நீடித்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.

பெரு பாலைவனத்தில் காணப்படும் பெரிய அளவிலான வடிவங்களை (Nazca Lines) யார் வரைந்தது?. இதுவரை பதிலில்லை. அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் கொள்ளையில் ஈடுபட்ட D.B.Cooper எப்படித் தப்பித்தார்? இன்னும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இப்படி நீளும் மர்மங்களின் பட்டியலில் எப்போதும் முதன்மை இடம் பிடிப்பது, பெர்முடா முக்கோணம். பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா தீவு, கரீபிய கடலில் உள்ள போர்ட்டோ ரிக்கோ தீவு மற்றும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை இணைக்கிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் எந்த கப்பல் சென்றாலும் காணாமல் போய்விடும். இப்பகுதிக்கு மேலே விமானங்கள் பறந்தால், அவையும் மாயமாகிவிடும். எனவே, மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாகவே பெர்முடா முக்கோணம் இன்று வரை இருந்து வருகிறது.

அங்குத் தீய சக்திகள் உள்ளதாக ஒரு தரப்பினரும், வேற்றுகிரகவாசிகள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு தரப்பினரும், இல்லை இல்லை இதெல்லாம் கடற்கொள்ளையர்களின் கைவண்ணம் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில்தான், ஆஸ்திரேலிய விஞ்ஞானியான கார்ல் க்ருஸ்ஸெல்னிக்கி (Karl Kruszelnicki) இது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

எழுத்தாளராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கும் இவர்,  கணிதம், இயற்பியல், உயிரி மருத்துவ பொறியியல் உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வான் இயற்பியல், கணினி அறிவியல், தத்துவம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார். எனவே இவரது கருத்துகள் ஆய்வுலகில் எப்போதும் மதிப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன.

தற்போது, பெர்முடா முக்கோணம் குறித்து கருத்து பகிர்ந்துள்ள Kruszelnicki, அந்த குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட சம்பவங்கள் எதுவுமே இயற்கைக்கு முரணானவையல்ல எனக் கூறியுள்ளார்.

மனித தவறுகள், தவறான வழியில் செல்லுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பெர்முடா முக்கோண பகுதியில் விபத்துகள் நேரிடுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெர்முடா முக்கோண பகுதியில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்முடா முக்கோணம் அதிக கடல் திட்டுகளையும்,  shallow area எனப்படும் குறைந்த ஆழம் கொண்ட பகுதிகளையும் கொண்டுள்ளதாகக் கூறும் Kruszelnicki, இதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை ஏற்படும்  புயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளதாகத் தெரிவிக்கும் அவர், மனித தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

கடல் பயணத்தின்போது இடர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பலர் பின்பற்றுவதில்லை எனவும், அதனால் பல அசம்பாவிதங்கள் நேரிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

உண்மை நிலைமை இப்படி இருந்தாலும், அமானுஷ்யம், மர்மம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அது குறித்த கதைகளை அதிகம் கேட்க அவர்கள் விரும்புகின்றனர். இதனால்தான், பெர்முடா முக்கோணம் குறித்த அமானுஷ்ய கதைகள் இன்றுவரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக Kruszelnicki கூறுகிறார்.

Tags: The mystery of the Bermuda Triangle has been solvedபெர்முடா முக்கோணத்தின் மர்மம்பெர்முடா முக்கோணம்
Share
Tweet
SendShare
Previous Post

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies