சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும்  வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டம்  இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது..

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இந்தநிலையில், உலகத்தின் கூரையான திபெத்தின் ஒவ்வொரு பகுதியையும், தங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைக்கச் சீனா திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது. அதன்படி திபெத்தை சீனாவின் வடக்குப் பகுதியான ஷின்ஜியாங் உடன் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது. ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதியை இணைக்கும் இந்த திட்டம், உண்மையில் சீன ரயில்களை இந்தியாவின் நுழைவு வாயிலான அக்சாய்சின் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அக்சாய் சின், 1962 ஆண்டு சீனப்போரின்போது சீனாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக மாறியது. மாவோவின் சீனா என்ற மெகா-உள்கட்டமைப்பு திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு, அக்சாய் சின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த ரயில் பாதை சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சாய்சின் பகுதியையொட்டி, கடந்த 1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையைச் சீனா அமைத்திருந்தது. தற்போது அதே பகுதியில் ரயில் பாதைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள லாசா – நியிஞ்சி ரயில் பாதையைச் சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள ராணுவ தளமான செங்டு பகுதியுடன் இணைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையிலும், நேபாள எல்லையை இணைக்கும் வகையிலும், ரயில் பாதைகளை அமைக்கச் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய எல்லையை நோக்கி சீன துருப்புகளை எளிதாக அனுப்பவும், ராணுவத் தளவாடங்களை எல்லையை நோக்கி வேகமாக நகர்த்தவும் இந்த ரயில் பாதைகள் உதவும் என்று கருதப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையொட்டி சீனா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில்,  இந்தியாவும்  தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: China's new railway project: Will India retaliate?சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம்Indiaஇந்தியாchina newschina news today
Share
Tweet
SendShare
Previous Post

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Next Post

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies