ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பாம்பன் பழைய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள ரயில் தூக்குப்பாலம் உறுதித் தன்மையை இழந்ததால், பழைய ரயில் பாலம் அருகே கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 500 டன் எடை கொண்ட செங்குத்து இரும்பு தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், தூக்கு பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சிய பரிமாறி கொண்டனர்.