ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அழகுவள்ளி அம்மன் கோயிலில் வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.
கோவிலாங்குளம் கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆடி திருவிழாவையொட்டி நடைபெற்ற எருதுகட்டு விழாவில் மதுரை, சிவகங்கை தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.
போட்டியில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்கள் மற்றம் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.