டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்களை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாநகராட்சித் தேர்தல் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வென்று மாநகராட்சியைக் கைப்பற்றியது.
பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தின்படி, 10 உறுப்பினர்களை நியமித்தார். துணைநிலை ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆல்டர்மேன்களை நியமிக்க, நாடாளுமன்றம் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதில் மாநில அரசு தலையிட முடியாது என தீர்ப்பளித்தனர்.