வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் உடைந்து குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் காரக், டேங்க் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.