பிரதமரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பி தயாநிதி மாறனை, கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக பதவி ஏற்ற மோடி அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்க மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
செய்தியாளரிடம் பேசிய அவர்,
பாஜகவின் மாவட்ட தலைவர் முதலமைச்சர் அவர்களை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழர் முதலமைச்சர் ஸ்டாலின், பொறுப்புள்ள முதலமைச்சர் என்றால் பாரதப் பிரதமர் அவர்களை தரக்குறைவாக பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனை முதலில் கைது செய்ய வேண்டும்.
மேலும் திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் பொது கூட்டங்களில் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசிய வருகின்றார். இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத கையால் ஆகாத அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும் பா. ரஞ்சித், திருமாவளவன் போன்றவர்கள் இந்து மதங்களை தொடர்ந்து தவறாக பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒரு அரசின் கையாளகத் தன்மை தான் காட்டுகிறது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் இந்த நாடு அமைதியாக இருக்கும்.
அண்ணாமலை பதவி பறிபோகும் என பேசி வருபவர்கள் மத்தியில் 2026 -ல் அவரின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார்.