கோவை மாநகராட்சியில், கட்சிக்காக விஸ்வாசமாக இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்காமல் நழுவி சென்றதால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாநகராட்சியில் மேயர் தேர்தலையொட்டி, அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 96 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், 50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருவதாகவும், தனது வருவாயின் பெரும் பகுதியை திமுகவிற்கே செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே தனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனவும் ரங்கநாயகியை மேயராக நிறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அமைச்சர்களை எதிர்த்து கவுன்சிலர் சாந்தி முருகன் பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.