முன்னெடுப்புகள் இல்லாமல் முன்னேற்றம் எப்படி சாத்தியம்? - அண்ணாமலை கேள்வி!
Aug 13, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னெடுப்புகள் இல்லாமல் முன்னேற்றம் எப்படி சாத்தியம்? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Aug 6, 2024, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர்  ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்வார்? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, ஜவுளித் துறையில், நமது நாட்டுக்கு, குறிப்பாக நமது திருப்பூருக்கு, அதிக வாய்ப்புகள் கிடைக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளது. வங்கதேசம், ஜவுளித் துறையில், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

மாதம் சுமார் 3.5 முதல் 3.8 பில்லியன் டாலர் வரையிலான ஜவுளி ஏற்றுமதி, வங்கதேச நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, இந்த ஜவுளி ஏற்றுமதி, இந்திய அளவில் ஜவுளித்துறையில் பெயர்பெற்ற நமது திருப்பூருக்குக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்திய அளவில், மொத்த ஜவுளி ஏற்றுமதியில், திருப்பூர் 50% க்கும் அதிகமான பங்கை வகிக்கிறது. தற்போது, இந்தக் கூடுதல் ஏற்றுமதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், திருப்பூரின் ஜவுளி வர்த்தகம், மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.

வங்கதேசத்தின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், குறைந்தது 10% ஏற்றுமதிக்கான வாய்ப்பு திருப்பூருக்குக் கிடைக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம், மாதம் சுமார் 300 – 400 மில்லியன் டாலர் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், தமிழக முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, இது குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. வங்கதேசத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கும் நிறுவனங்களையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும், தமிழகத்துக்குக் கொண்டு வர ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்கிறார்களா?

தமிழகத்திற்கு இந்த நிறுவனங்களை கொண்டுவர முன்னெடுப்புகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினாரா என்பவை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

மிகப்பெரும் தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும்போது, அவற்றை இருகரம் கொண்டு வரவேற்கும் வகையில் செயல்படாமல், முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்லப் போகிறோம் என்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர்  ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்வார்?

உடனடியாக, தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள இந்த மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், திருப்பூர் பகுதிகள் முழுவதையும், இந்தக் கூடுதல் ஜவுளி ஏற்றுமதி வாய்ப்புக்களை முழுமையாகப் பெற்று, அவற்றை நிறைவேற்றத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஜவுளித் துறை உற்பத்தியாளர்கள் கருத்துக்களையும் முழுமையாகக் கேட்டறிந்து, மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: How is progress possible without initiatives? - Annamalai question!
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த லியாண்டர் பயஸ்!

Next Post

வங்கதேசத்தில் என்ன நடக்கும்?: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராணுவ ஆட்சி!

Related News

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies