நேபாளத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சீனாவை சேர்ந்த நான்கு பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து ரஸுவா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட மூன்று மணிநேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து வெடித்து சிதறியது.
நுவாகோட் மாவட்டம் ஷிவ்புரி பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்தன. இந்த விபத்தில் நேபாளத்தை சேர்ந்த விமானி அருண் மல்லா மற்றும் சீனாவை சேர்ந்த 4 பேர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.