வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
முன்னதாக, நடிகர்கள் அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோரும் வயநாடு நிலச்சரிவுக்காக நிவாரணம் வழங்கினர். நடிகர் ராம் சரணும், அவரது தந்தை சிரஞ்சீவியும் இணைந்து ஒரு கோடி ரூபாய் வழங்கினர். நடிகர் விக்ரம் 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.