புதுச்சேரி மாநிலம், அம்பகரத்தூரில் மூதாட்டியை தாக்கி நகைக்கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த கனகவள்ளி என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கிவிட்டு 50 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 32 சவரன் நகை மற்றும் பொருட்களை மீட்டனர்.