ஆகஸ்ட் 16ஆம் தேதி நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 29 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் சென்னை எழும்பூர் – நெல்லை இடையே செல்லும் விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை எழும்பூர் – செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில், பகுதியாக ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி விரைவு ரயிலும், பகுதி ரத்து செய்யப்பட்டு, மாலை 6.20 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் எனக்கூறியுள்ள தெற்கு ரயில்வே,
சென்னை-தூத்துக்குடி, சென்னை-மதுரை, சென்னை-தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்கள் எந்த மாற்றமும் இன்றி புறப்பட்டு செல்லும் என தெரிவித்துள்ளது.