கரூர் மாவட்டம் கிராயூர் பகுதியில் முன்பகை காரணமாக வயதான தம்பதியின் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்கள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராயூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் அவருடைய மனைவியுடன் தோட்டத்து நிலத்தில் வசித்து வந்துள்ளார். இவருடைய நிலத்தின் அருகே மூர்த்தி, பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு நிலம் அமைந்துள்ளது.
இந்நிலையில் சின்னசாமியின் இடத்தை பொதுவழியாக 5 பேரும் பயன்படுத்தியதாகவும், மேலும், அந்த நிலத்தை தங்களுக்கே தந்துவிடுமாறும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டிற்கு செல்லும் வழியில் முட்புதர்களை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர்.
இதையறிந்த சின்னசாமியின் மகன் அஞ்சித் குமார் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தை நாடினார். அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் முட்களை அகற்றினர்.