கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே தன் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கூறி வீடுபுகுந்து மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சாரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த சபின் என்ற இளைஞருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படவே, மாணவியின் தாயார் லேகா, தக்கலை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதுகுறித்து அறிந்த சபின் மாணவியின் வீட்டுக்குள் புகுந்து வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார். இதனையடுத்து லேகா மீண்டும் புகாரளித்த நிலையில், சபினை போலீசார் கைது செய்தனர்.