சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக வரும் மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என லைகா நிறுவனம் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’, ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், லைகா நிறுவனத்தின் பெயரில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வெளியானதாக கூறப்படுகிறது.
இதனை மறுத்துள்ள லைகா நிறுவனம், சமூக வலைத்தளங்களில் தங்களது அதிகாரப்பூர்வ பக்கங்களில் வரும் தகவல்களை மட்டும் நம்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.