தருமபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டலப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கேபி அன்பழகன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எம்பி தேர்தலில் தோல்வி குறித்தும், சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, முன்னாள் மாவட்ட நிர்வாகி சங்கர் பேசும்போது, மாவட்ட செயலாளர் கேபி அன்பழகனை தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மேடையிலேயே இருதரப்பினர் இடைேய மோதல் வெடித்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.