சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், கடந்த 1993 -ம் ஆண்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
“பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று, நினைவு நாள் அஞ்சலி செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
“பேரிடர் காலங்கள், பொதுச் சேவைளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, ஈடுபட்டு வரும் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், “போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பல இடையூறுகளைத் தாண்டி, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, “ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.