நீலகிரி மாவட்டம், கோக்கால் பகுதியில் வீடுகள் மண்ணில் புதைந்ததற்கான ன காரணம் குறித்து புவியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தினர்.
மேல் கூடலூர் அருகே கோக்கால் குடியிருப்பில் எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அப்பகுதியில் வசிக்கும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப கருவிகள் மூலம் மண்ணின் தன்மை மற்றும் நீரோட்டம் குறித்து புவியியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.