சென்னை எழும்பூரில் Zero Accident Day-வை முன்னிட்டு போக்குவரத்து காவல் துறை சார்பாக ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டன.
பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் பங்கேற்று மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், வரும் 26-ம் தேதி சென்னையில் எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதற்கான முன் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.