மயிலாடுதுறை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் அமைத்து தருமாறு முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலபாண்டூர் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் கட்டப்பட்ட பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளிக் கட்டடத்தின் மேற்பூச்சு கை வைத்தவுடன் பெயர்ந்து விழும் நிலையிலும், ஆங்காங்கே விரிசலுடனும் காணப்படுகிறது.
இதனால் மாணவர்கள் ஒருவித பயத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதனால் பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் அமைத்து தருமாறு முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.